புதன், 4 ஜூன், 2014

நாளைமுதல் 2014 ஆம் ஆண்டிற்கான சாரண சேவை மற்றும் பொதுத்தொடர்புகள் வாரம் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது!!!

ஜூன் 6 ல் இருந்து ஜூன் 22 வரை  இலங்கை சாரணர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை சாரணர் சேவை மற்றும்  பொதுத் தொடர்புகள்  வாரத்தை 03/06/2014 அன்று, அலரிமாளிகையில் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி தொடங்கி வைத்தார். (படங்கள் இணைப்பு)

சாரணர் சேவை மற்றும்  பொதுத் தொடர்புகள் வாரமானது  இலங்கை சாரணர் தலைமைக்காரியலயத்தினால் முன்னெடுக்கப்படு நிகழ்வு ஆகும்.   சாரணர்கள்  ஆண்டுதோறும் தமது  சாரணர் குழுவுடன் இணைந்து மேற்கொள்ளும் ஓர் உன்னத நிகழ்வாகும் . நாடு பூராகவும் 37 சாரண நிர்வாக மாவட்டங்களில்  45000 க்கு மேற்பட்ட சாரணர்கள் இம் முறை தமது சாரணர் சேவை மற்றும்  பொதுத் தொடர்புகள் வாரத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

சாரண சிறார்கள் சாரண சேவை மற்றும்  பொதுத் தொடர்புகள் வாரத்தினை முன்னிட்டு உங்கள் இல்லங்கள், தொழில் நிலையங்கள் நோக்கி சமூக உணர்வுடன் தமது வேலை வாரத்தினை மேற்கொள்ள வருகை தரவுள்ளார்கள், அவர்களை இன்முகத்தோடு வரவேற்று சிறார்களை நாளைய சமூகத்தின் தலைவர்களாக மிளிரவைக்க சாரணர் சங்கங்கள் மக்களின் ஆதரவை வேண்டி நிற்கிறது.

இச் சாரணர் பொதுத்தொடர்புகள் வாரத்தின் மூலம் சாரணர்களின் திட்டமிடல், நேர முகாமைத்துவம், தலைமைத்துவம், சமூகப்புரிந்துணர்வு, உழைப்பின் மகத்துவம் போன்றவற்றை எதிர் பார்த்தே உங்களை நாடி சாரணர்கள் வருகைதரவுள்ளமை சிறப்பம்சமாகும். இவர்களின் இலக்குகள் வெற்றியடைய தங்களின் முழு ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தங்களை நாடிவரும் சிறார்களுக்கு ஆபத்து விளைவிக்கின்ற பாரதூரமான வேலைகளை வழங்குவதை தவிர்த்துக்கொள்வதுடன், உழைப்பிற்கு பொருத்தமான சன்மானத்தை வழங்கி சாரண சிறார்களை ஊக்கிவிக்கவும். 

இவ் வருடம் மக்கள் வங்கி சாரணர் சேவை மற்றும் பொதுத் தொடர்புகள் வாரத்தின் அதிகாரப்பூர்வ வேலை அட்டைக்கு   அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரு சு.காண்டீபன்,
ஊடக மற்றும் பொதுத்தொடர்புகளுக்கான சாரண உதவி மாவட்ட ஆணையாளர், வவுனியா.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக