புதன், 4 ஜூன், 2014

இலவச மூக்கு கண்ணாடியும் நிதியுதவியும் வழங்கல்!!! (படங்கள் இணைப்பு)

வவுனியா செட்டிகுளம் நேரியகுளத்தில் வசிக்கும்  டெனிஸ்ட்ரிக்கா சாதாரண தரம் கற்று தேர்ந்து, உயர்தரத்துக்கு செல்கையில் "கண்பார்வை குறைபாட்டால்" தொடர்ந்து கற்க முடியாமல் அவதிப்பட்டார்.

இந்த நிலையில் பல பேரிடம் உதவி கேட்டும் கிடைக்காமல் இறுதியாக "சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய" நிர்வாகத்தை சேர்ந்த ஒருவரிடம் தொடர்பு கொண்டு தனதும், மகளினதும் நிலைமையை கூறியபோது, "சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்" செல்வி பரஞ்சோதி செல்வநிதியின் ஓராண்டு நினைவை ஒட்டி அவரது சகோதரி திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தின் மூலம் இந்த உதவி வழங்கப்பட்டது .


அந்த மாணவியின் குடும்ப செலவுக்கென சிறியதோர்  நிதி உதவி அம்மாணவியின் தாயிடம் திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால்  வழங்கப் பட்டதுடன், விரைவில் அம்மாணவிக்கு கண்ணாடியும் வழங்கப்படவுள்ளது.  

இந்த நிகழ்வில் வவுனியா முன்னாள் உபநகரபிதாவும் கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கோவில்குளம் இளைஞர் கழக உறுப்பினர்களான காண்டீபன், ஜெனார்த்தனன் மற்றும் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) ஆகியோர் கலந்து கொண்டனர்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக