திங்கள், 19 மே, 2014

வவுனியா புது வாழ்வு பூங்கா (ORHAN) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு... (படங்கள் இணைப்பு)

வவுனியா மாவட்ட வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தில், கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள், சவூதி அரேபியாவில் வசிக்கும் சமூகசேவையாளர் திரு. குணா  அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டு, இதனை புளொட் முக்கியஸ்தரும் , வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபாகருமாகிய
 திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் இன்று(19/05) மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் கோவில்குளம் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த காண்டீபன், நிகேதன்,செல்வம் ஆகியோருடன் ஒர்ஹன் தலைமை வளவாளர் திரு என்.குலராஜா மற்றும் ஆசிரியர்களான ஆர்.ஜீவதயானி, கே.சாந்தி, எஸ்.மயூரதி, தேவிகா, எம்.மேனிசா, எம்.மேனகா, கே.ஜெசிந்தா, எ.கலைவாணி, என்.பாத்திமா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பூர்வீகம் செய்திகளுக்காக ஓவியன்






































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக