திங்கள், 19 மே, 2014

வவுனியா ஸ்ரீநகர் தங்கண்ணா மலரும் அரும்புகள் முன்பள்ளியின் 18 ஆவது விளையாட்டு விழா !!!

வவுனியா ஸ்ரீநகர் தங்கண்ணா மலரும் அரும்புகள்முன்பள்ளியின்  18 ஆவது விளையாட்டு விழா இன்று(19/05) மாலை 2.00 மணிதொடக்கம் ஸ்ரீ சனசமூக நிலைய மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருமதி த.ஸ்ரீரஞ்சன்(ஜப்) தலைமையில் நடைபெற்ற இவ்  நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோருடன் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தார்..  
இவர்களுடன் முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு கே.தர்மபாலன், துர்க்கை அம்மன் ஆலய குருக்கள் பிரம்மஸ்ரீ கோ. சத்திஜெஸ்வரசர்மா, பூந்தோட்டம் கிராம சேவையாளர் திரு ஜெ.விஜயரத்தினம்  மற்றும் முக்கிய பிரமுகர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பூர்வீகம்  செய்திகளுக்காக ஓவியன்


































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக