செவ்வாய், 20 மே, 2014

இலங்கையில் தேவை வெற்றிக்கொண்டாட்டமல்ல நல்லிணக்கமே; கனேடிய வெளிவிவகார அமைச்சர் விளக்கம்!!


தற்போதைய நிலையில் இலங்கைக்கு தேவையாக இருப்பது நல்லிணக்க முயற்சிகளே தவிர வெற்றிக் கொண்டாட்டங்களல்ல என்று தெரிவித்திருக்கிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட். இதன் காரணமாகவே போர் வெற்றி நிகழ்வை கனடா புறக்கணித்ததாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். யுத்த வெற்றி நிகழ்வில் கனடா கலந்துகொள்ளாது என்று இலங்கைக்கான கனடா தூதுவர் ஷெல்லி வைற்றிங் ஏற்கனவே
அறிவித்திருந்தார். இந்தநிலையில் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்துள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர், இலங்கை அரசாங்கத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களை கடந்த வருடங்களிலும் கனடா புறக்கணித்தது. இதற்கான காரணத்தை கொழும்பிலுள்ள கனடிய தூதுவர் ஷெல்லி வைட்டிங் உள்ளுர் ஊடகங்களுக்கு விளக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக