வெள்ளி, 23 மே, 2014

தாய்லாந்தில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்....!!!

தாய்லாந்தில் ஓர் இராணுவ சதிப்புரட்சியாக, அந்நாட்டு அரசை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக தாய்லாந்து இரா ணுவ தளபதி ஜனரல் பிரயுத் சான் ஒசா அறிவித்துள்ளார்.

நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் அரசியல் சீர்திருத்தத்தை கொண்டுவரவும் இராணுவம் நட வடிக்கை எடுக்கும் என்று நேற்று தொலைக்காட்சி முன் தோன்றிய இராணுவ
தளபதி அறிவித்தார்.

கடந்த இரு தினங்களாக தாய் லாந்து இராணுவம் அந்நாட்டு அரசி யல் தரப்புகளை சந்தித்து பதற்ற சூழலை தணிக்க மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி யடைந்த நிலையிலேயே நாட்டை யும் அரசையும் தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதாக இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த பல மாதங்களாக தாய் லாந்தில் அரசியல் பதற்றம் நீடித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை அந்நாட்டு இராணுவம் நாட்டில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியது.

இந்நிலையில் ஆர்ப்பாட்ட முகாம் களில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர் களை அகற்றுவதற்கு இராணுவம் நேற்று துருப்புகளையும் வாகனங் களையும் அனுப்பியுள்ளது.

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கடந்த ஆண்டின் கடைசியில் ஆரம்பிக்கப்பட்டது. இதனை அடுத்து பிரதமராக இருந்த யிங்லுக் பினவாத்திரா பாராளுமன்ற கீழவையை கலைத்தார். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த பல மாதங்களாக தலைநகர் பாங்கொக்கின் பல பகுதிகளையும் முடக்கி வைத்துள்ளனர்.

அதிகார துஷ்பிரயோக குற்றச் சாட்டில் பிரதமர் யிங்லுக்கை நீதிமன்றம் இம்மாத ஆரம்பத்தில் பதவி நீக்கம் செய்தது.

கடந்த 2006 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த யிங்லுக்கின் சகோதரர் தக்சின் 'பினவாத்ராவை இராணுவம் பதவி கவிழ்த்ததைத் தொடர்ந்து அங்கு அதிகார போட்டி நீடித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக