வெள்ளி, 23 மே, 2014

மோடியின் சம்பளம் ரூ. 1.60 இலட்சம்...!!!!!

பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு மாத சம்பளம் ரூ.1.60 இலட்சம் கிடைக்கும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் 2013ம் ஆண்டு வெளியான தகவலில் பிரதமருக்கான சலுகைகள் மற்றும் சம்பளம் குறித்த விவரம் இடம்பெற் றுள்ளது. அதன்படி பிரதமருக்கான மாத சம்பளம் ரூ.1.60 இலட்சம் ஆகும்.

இதில் அடிப்படை சம்பளம் ரூ. 50 ஆயிரம், தினசரி படி என்கிற வகையில் மாதம் ரூ. 62 ஆயிரம், எம்.பி. நிதி என்ற வகையில் ரூ. 45 ஆயிரம் மேலும் இதர செலவுகள் என்ற வகையில் ரூ.3 ஆயிரம் என ஆகமொத்தம் ரூ.1 இலட்சத்து 60 ஆயிரம்
மாத சம்பளமாக கிடைக் கும்.

ஒரு மாதத்துக்கு நமது எம்.பிக் கள் பெறும் சம்பளம் ரூ.50 ஆயிரம். தொகுதி நிதியாக மாதம் ரூ.45 ஆயிரம் வழங்கப்படுவது தனி. நாடா ளுமன்ற கூட்டம் நடக்கும்போதோ, அல்லது நாடாளுமன்ற கமிட்டி கூட் டம் நடக்கும்போதோ, அதில் பங் கேற்று கையெழுத்திட்டால் நாள் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக