வெள்ளி, 23 மே, 2014

கல்வி அமைச்சு நடாத்தும் 2014 க.பொ.த (உ.த) பரீட்சைக்கான உதவிக் கருத்தரங்குகள்....!!!!!

கல்வியமைச்சு வருடாந்தம் நடாத்தி வரும் க.பொ.த (உ.த) பரீட்சைக்கான உதவிக் கருத்தரங்கு இவ்வருடமும் ஜூன், ஜூலை மாதங்களில் 03 தினங்களில் நாடளாவிய ரீதியில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன என்று கல்வியமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்தார்.

இக்கருத்தரங்கிற்குத் தேவையான வினாத்தாள்கள் இம்முறை பரீட்சைத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்படவுள்ளன.

இவ்வுதவிக் கருத்தரங்குகள் 10 பாடங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.

ஜூன் மாதம் 30 ஆம் திகதி பொருளியல், இணைந்த கணிதம், உயிரியல் ஆகிய
பாடங்களுக்கும் ஜூலை 01 ஆம் திகதி சிங்களம், கணக்கியல், இரசாயனம், தமிழ் ஆகிய பாடங்களுக்கும் ஜூலை 02 ஆம் திகதி பௌதீகம், விவசாயம், வியாபாரக்கல்வி ஆகிய பாடங்களுக்கும் கருத்தரங்குகள் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும்.

காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை கருத்தரங்கு இடம்பெறும்.

கருத்தரங்கை வெற்றிகரமாக நடாத்த ஒவ்வொரு வலயக் கல்விப் பணிப்பாளரும் பரிபூரணமாக ஒத்துழைக்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார்.

இதற்காக மேற்பார்வை செய்வதற்கு இணைப்பாளர் ஓருவரை நியமிக்குமாறும் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளச் செய்யுமாறும் கேட்டுள்ளார்.

பிரஸ்தாப கருத்தரங்கிற்கான இறுவட்டுகள் ஜூன் மாத நடுப்பகுதியில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக