துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.துபாயில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில், அந்த அணி 123 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்காவை பின்னுக்குத் தள்ளி 5 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பெற்ற அபார வெற்றி, ஆஸி. அணி முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.தென் ஆப்ரிக்க அணியும் 123 புள்ளிகள் பெற்றிருந்தாலும், அந்த அணிக்கு 2வது இடமே கிடைத்துள்ளது. இங்கிலாந்து (104), பாகிஸ்தான் (103), இந்தியா (102) அடுத்த இடங்களை பிடித்துள்ளன.
நிலை அணி புள்ளிகள்
1 ஆஸ்திரேலியா 123
2 தென் ஆப்ரிக்கா 123
3 இங்கிலாந்து 104
4 பாகிஸ்தான் 103
5 இந்தியா 102
6 நியூசிலாந்து 92
7 இலங்கை 90
8 வெஸ்ட் இண்டீஸ் 76
9 ஜிம்பாப்வே 40
10 வங்கதேசம் 21
நிலை அணி புள்ளிகள்
1 ஆஸ்திரேலியா 123
2 தென் ஆப்ரிக்கா 123
3 இங்கிலாந்து 104
4 பாகிஸ்தான் 103
5 இந்தியா 102
6 நியூசிலாந்து 92
7 இலங்கை 90
8 வெஸ்ட் இண்டீஸ் 76
9 ஜிம்பாப்வே 40
10 வங்கதேசம் 21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக