வெள்ளி, 2 மே, 2014

வன்னியின் போர் கிளிநொச்சியில் ஆரம்பம் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆரம்பித்து வைத்தார்!!!(படங்கள் இணைப்பு)

வன்னியின் போர் என வர்ணிக்கப்படுகின்ற கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும், முல்லைத்தீவு புதுகுடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் இடையில் நடைபெறுகின்ற சிநேகபூர்வ துடுப்பாட்டப் போட்டி இன்று(02) கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகியது.
நான்காவது தடவையாக இடம்பெறுகின்ற 2014 ஆம் ஆண்டுக்கான போட்டியினை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக்குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். போட்டியினை ஆரம்பித்துவைத்து வாழ்த்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கிடையிலான சிநேகபூர்வ துடுப்பாட்ட போட்டி மாணவர்களிடையே நட்புறவை ஏற்படுத்துவதோடு எங்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. விளையாட்டு இளைஞர்களுக்கு இடையே நல்ல தலைமைத்துவ பண்பினையும், ஒற்றுமையையும் வளர்த்தெடுக்கும் எனவே இது போன்ற நிகழ்வுகள் இந்த காலகட்டத்திற்கு அவசியம். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது மீள தங்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் எம்மிடையே இருக்கின்ற வேறுபாடுகளையும், புரிந்துணர்வுமின்னையையும் களையும் நிகழ்வாக நாம் இதனை பார்க்கின்றோம்.
அந்த வகையில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் மற்றும் புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி அணி வீர்ர்களை வாழ்த்துகிறேன் விளையாட்டின் வெற்றித்தோல்வி சகஜம் என்ற அடிப்படையில் அமைய வேண்டும் அந்த மனபக்குவம் இந்த வீரர்களிடம் இருப்பது எமக்குத் தெரியும் எனவே வீரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி விளையாட்டுத்துறையிலும் மிளிர வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் பங்கையற்ச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மகாண சபை உறுப்பினர்களான வை.தவநாதன், ப.அரியரத்தினம், பளை பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் அன்பழகன், வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்தி குழுத் தலைவர் பத்மநாதன், புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி அதிபர் மற்றும் ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் படசாலை அபிவிருத்தி சங்கத்தினர், உள்ளிட்;ட பலர் கலந்துகொண்டனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக