புதன், 10 டிசம்பர், 2014

இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்க முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும்(Photos)

யாழ். இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்ளியின் 2014ம் ஆண்டிற்கான கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும் பிற்பகல் 2.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உபதலைவர் திரு. ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இதன்போது முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், இடம்பெற்று பிள்ளைகளுக்குப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. இணுவில் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு. உதயகுமாரன் (உதயன்) அவர்கள் நன்றியுரையாற்றினார்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக