புதன், 2 ஜூன், 2010
மனித உரிமை தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை-ஐ.நா மனிதஉரிமை ஆணையர்..!!
இலங்கையின் மனித உரிமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்று ஐ. நா. மனிதஉரிமை தொடர்பான ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் விடுக்கப்பட்டுள்ள கூற்றினை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. இதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனை சந்தித்தபின் இடம்பெற்ற இணைந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கையினால் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக் குழு இலங்கையின் நிரந்தர சமாதானத்துக்கு அடித்தளமாக அமையும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக