ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதிகளை செலுத்துவதற்கான நிதியில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய நிதி தொடர்பில் அரசாங்கம் புதிய ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.
எனினும் கட்டாயமாக பங்கேற்க வேண்டிய ஓய்வூதிய ஆணையாளர் விசாரணையில் பங்கேற்கவில்லை.
முன்னைய திட்டத்தின்படி அரச ஊழியர் ஒருவர் பத்துவருடத்துக்கு மேல் பணியாற்றி 60 வயதாகும் போது ஓய்வூதிய தொகை
பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
எனினும் புதியமுறைப்படி ஓய்வூதியத்துக்கு கீழ் வரும் அரச ஊழியர் ஒருவர் வங்கியி;ல் இருந்து கடனை பெற்றுக்கொள்ளமுடியும். இது 18 வருடங்களுக்குள் மீள்செலுத்தப்படலாம். இதற்காக 12 வீத வட்டியை வங்கிக்கு செலுத்தவேண்டும்.
எனினும் இதனை ஆட்சேபித்த தொழிற்சங்க சம்மேளன சட்டத்தரணிகள் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 18ஆயிரம் பேர் தமது ஓய்வூதியத்தை பெறமுடியவில்லை என்று சுட்டிக்காட்டினர்.
இதற்கு பதிலளித்த ஓய்வூதிய திணைக்கள அதிகாரிகள், புதிய திட்டம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமையால் ஓய்வூதிய நிதியில் ஓதுக்கீடுகள் இல்லை என்று குறிப்பிட்டனர்.
இந்தநிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக