வியாழன், 22 மே, 2014

யாழ் பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை...!!!

யாழ். அரியாலை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணொருவரை கழுத்தை நெரித்து கொலைசெய்து அவரிடமிருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக