வியாழன், 22 மே, 2014

வாகன இறக்குமதியை 30 வீதத்தினால் குறைக்க அரசாங்கம் தீர்மானம்......!!!!

வாகன இறக்குமதியை 30 வீதத்தினால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விரைவில் வாகன இறக்குமதியை குறைத்து, உள்நாட்டில் வாகனங்களை பொருத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்து அவற்றை இலங்கையில்
பொருத்தி வாகனங்களை தயாரிக்கும் நிலையமொன்று ஏற்கவெ பொல்கஹாவெல பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை உற்பத்தி செய்து தொடர்பான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வாகன  உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் வரிக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக