திங்கள், 19 மே, 2014

காணாமல் போன மலேசிய விமானம்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா......!!!!!

அண்மையில் வான்பரப்பில் மாயமான மலேசிய விமானம், இராணுவ பயிற்சியின் போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் எட்டாம் திகதி நடுவானில் மாயமானது.

நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை.


இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், ‘புளுபின்–21’ என்ற நீர்மூழ்கி ‘ரோபோ’வை கொண்டு நடந்துவரும் தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லை. மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டது. இதில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தாய்லாந்து - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியின் போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் பின்னர் இந்த தகவல் மூடிமறைக்கப்பட்டுள்ளது என்றும் மாயமான விமானம் குறித்து எழுதப்பட்ட புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த உறவினர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது குறித்து புத்தகம் வெளி வந்துள்ளது.

"விமானம் MH370: மர்மம்" என்ற புத்தகம் அவுஸ்திரேலியாவில் விற்பனைக்கு வருகிறது என்று இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனை சேர்ந்த ஆங்கிலோ அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் நைஜல் கவ்தோர்னெ இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று கிட்டத்தட்ட நிச்சயமாக எதுவும் தெரிந்திருக்காது என்று கவ்தோர்னெ தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தை சேர்ந்த ஆயில் ரிக் தொழிலாளி மைக் மெக்கே நேரடியாக நடந்த சம்பவத்தை பார்த்ததாக குறிப்பிட்டு இந்த புத்தகத்தில் நைஜல் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மாயமான மலேசிய விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததை அடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மாயமானபோது தெற்கு சீன கடலில் தாய்லாந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் மற்ற பணியாளர்கள் இணைந்து போர் பயற்சி நடத்தினர். அப்போது விமானம் ஒன்று எரிந்து தாய்லாந்து வளைகுடா பகுதியில் விழுந்ததை மைக் மெக்கே பார்த்துள்ளார் என்று இரண்டையும் ஒப்பிட்டு கவ்தோர்னெ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சியின் துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக