திங்கள், 19 மே, 2014

ரவிகரனை நேரில் சமுகமளிக்குமாறு முல்லை மாவட்ட நீதிமன்று உத்தரவு!!


வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை நாளை செவ்வாய்க்கிழமை சமுகமளிக்கும் படி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது - இன்று மாலை 5 மணியளவில் நீதிமன்றத்தில் இருந்து வந்த அறிவித்தலின் படி நாளை காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்குத் தவறாது சமுகமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. மேற்படி அறிவித்தலை கொடுக்க வந்தவரிடம் நீதிமன்ற அழைப்பிற்கான காரணம் என்ன என்று வினவிய போது,
அது தொடர்பில் தமக்கு அறிவிக்கவில்லை எனவும் மேற்படி அறிவித்தலை மாத்திரம் கொடுத்துவிடும் படி தெரிவித்ததாகவும் அவர் பதிலளித்தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக