ஞாயிறு, 18 மே, 2014

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி!


முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், கி.துரைராஜசிங்கம், மா.நடராசா, பிரசன்னா இந்திரகுமார், ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது
உயிரிழந்தவர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக