யுத்தக் குற்றங்களை புரிந்த இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதன் ஊடாக நியூசிலாந்து அரசாங்கமும் குற்றச் செயலில் ஈடுபடுவதாக அந்த நாட்டின் பசுமை கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் மனித உரிமைகள் தொடர்பான பேச்சாளர் ஜேன் லோகி இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் ஒக்லேண்டில்
வைத்து சந்தித்துக் கொண்டனர்.
இதன் போது இருவருக்கும் இடையில் இரகசிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் பல்வேறு யுத்தக் குற்றங்களை புரிந்துள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டின் அபிவிருத்திக்கு வர்த்தக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குவது, நியூசிலாந்து மேற்கொள்கின்ற குற்றச் செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜேன் லோகி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்த முற்பட்ட வேளையில், பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் நாடு கடத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக