திங்கள், 19 மே, 2014

தெஹிவளை வான் பாலத்தை தகர்ப்பதற்க கோபி திட்டமிட்டிருந்தார் சிங்களப் பத்திரிகை செய்தி...!!!!!!

தெஹிவளை வான் பாலத்தை தகர்ப்பதற்க கோபி திட்டமிட்டிருந்தார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த கோபி உள்ளிட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் தெஹிவளை வான் பாலத்தை தகர்க்கத் திட்டமிட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த திட்டம்
அம்பலமாகியுள்ளது.

வான் பாலத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் குறித்து கண்காணிக்குமாறு கோபி, புனர்வாழ்வு அளிக்கப்படாத புலி உறுப்பினர் ஒருவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த புலி உறுப்பினர் தெஹிவளை பிரதேச பேக்கரி ஒன்றில் கடமையாற்றியுள்ளார்.

அங்கிருந்தவாறு தகவல்களை திரட்டி வந்த குறித்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக