திங்கள், 19 மே, 2014

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு!!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மன்னிப்பு வழங்கவுள்ளார்.

இதன்கீழ், ஆயிரம் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் டி என் உபுலதெனிய தெரிவித்தார்.

எனினும் போதைப்பொருள் கடத்தல், துஷ்பிரயோகம் மற்றும் கொலை போன்ற பாரிய குற்றங்களுக்காக சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக