வியாழன், 22 மே, 2014

அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அமெரிக்க....!!!!!

இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இரு தரப்புக்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேணப்பட்டு வந்த உறவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொண்டு மெய்யான நல்லிணக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் சபை உறுப்பினர்
ருஷ் ஹொல்ட் (சுரளா ர்ழடவ) தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் சகல பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை என்பதனை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டுமென தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கு அரசாங்கம் உரிய முறையில் நாட்டம் காட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக