இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் அம்மையார் நியமிக்கப்பட்டமைக்கு இலங்கையில் பல கட்சிகளும் வேறுபாடின்றி வரவேற்புத் தெரிவித்துள்ளன என இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2012 ஏப்ரலில் இந்தியாவின் அனைத்துக் கட்சிக் குழு இலங்கைக்கு வருகை தந்த சமயம், இந்திய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் அந்தக் குழுவுக்குத் தலைமை வகித்து இங்கு வந்திருந்தார். அவரது தற்போதைய நியமனத்தை இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, தமிழ்க் கூட்டமைப்பின்
தலைவர் இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நிதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஐ.தே.கட்சியின் எம்.பி.யான ஆர்.யோகராஜன், ஜாதிக ஹெல உறுமயவின் எம்.பியான வண.அத்துரலியே ரத்னதேரர் ஆகியோர் வரவேற்று கருத்து வெளியிட்டனர். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரவும், தமிழ்ப் பகுதிகளில் சிவில் கடமைகளிலிருந்து இராணுவத்தை விலக்கவும் தமது முன்னைய இலங்கை விஜயத்தின் போது சுஷ்மா கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், சுஷ்மா தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு மனக்குறை உண்டு என இந்தியப் பத்திரிகை ஒன்று சுட்டிக்காட்டியது. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தாங்கள் ஏன் பங்கேற்க முடியாது என்பதை தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்கள் அவருக்கு நேரில் விளக்கிய பின்னரும் கூட அரசியல் தீர்வை எட்டுவதற்காக அந்தக் குழுவில் கூட்டமைப்பினர் பங்கேற்க வேண்டும் எனத் தீர்மானமாக அவர் அப்போது கூறியிருந்தார் என அந்தப் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக