வடபகுதியில் திட்டமிட்ட காணி அபகரிப்புக்கு அடுத்தபடியாக மொழியுரிமையும் பரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகப் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் மன்னார் மக்கள் தெளிவாகத் தெரிவித்தனர். மொழி உரிமை தொடர்பான கலந்துரையாடல் மன்னார் வாழ்வுதயம் கேட்போர்கூடத்தில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரித்தானிய தூதரகத்தின் அரசியல்துறை பொறுப்பாளர் டானியல் பெயின்ரர் மற்றும் திட்டமிடல் பொறுப்பாளர் சஜானி ரணத்துங்க, மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்டர் சோசை அடிகளார்
உட்பட மன்னார் மாவட்டத்தின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது பிரித்தானியத் தூதரகத்தின்அரசியல்துறை பொறுப்பாளர் டானியல் பெயின்ரர், மன்னார் மாவட்டத்தில் மொழி நடைமுறை எவ்வாறு உள்ளது என்று கேட்டுகொண்டார். இதன்போது கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட பிரதிநிதிகள், ஆரம்பத்தில் சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாக விளங்கியது. இதனை அடுத்து தழிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக தழிழ் மொழியும் அரச கரும மொழியாக அங்கிகரிக்கப்பட்டது.
எனினும் தழிழ் பகுதியில் தழிழ் மொழி அரச கரும மொழியாக நடைமுறையில் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக அரச திணைக்களங்களில் ஆவணங்கள் மற்றும் கடிதங்கள் அனைத்தும் சிங்கள மொழியிலேயே பேணப்படுவதாக சுட்டிகாட்டப்பட்டது. அதேபோன்று வைத்தியசாலைகளில் சிங்கள் மொழியிலான வைத்தியர்கள் அதிகம் உள்ளதால் சிகிச்சைக்காகச் செல்லும் தழிழ் மக்கள் மொழி தெரியாமல் பல அசௌவுகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதியும்போது தழிழ் மொழியில் பதியப்பட்டலும் அது மீண்டும் சிங்கள மொழிக்கு மாற்றப்பட்ட பின்பே நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது எனவும் தெரிவித்தனர். கருத்துக்களைக் கேட்டறிந்த பிரித்தானிய தூதரகத்தின் அரசியல்துறை பொறுப்பாளர் டானியல் பெயின்ரர், மடுத் தேவாலயத்தையும் சென்று பார்வையிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக