செவ்வாய், 6 மே, 2014

அமெரிக்கா, தமது நாட்டு இராணுவ வீரர்களை உரியவகையில் பராமரிப்பதில்லை, என இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது..!!!!

தமது நாட்டுக்காக போராடும் படைவீரர்களையும், படை சேவையில் இருந்து ஒய்வபெற்ற வீரர்களையும் அமெரிக்கா உரிய முறையில் பராமரிப்பதில்லை என்று இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது
இலங்கையின் இராணுவ தளபதி லெப்டினன்ட் தயா ரட்நாயக்க இன்று நாரஹன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில்
இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்கா உட்பட்ட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை இராணுவ வீரர்களை உரியமுறையில் பராமரிக்கிறது என்று தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா போருக்காக அதிகளவில் செலவுகளை செய்கிறது. எனினும் இராணுவ வீரர்களுக்கு அந்த நாடு உரிய செலவுகளை மேற்கொள்ளாமை கவலைதரும் செயலாகும்.

இலங்கையில் இராணுவ வீரர்கள் கவனிக்கப்படும் விதம் குறித்து தாம் அமெரிக்கா இராணுவ வீரர்களை சந்தித்த போது கூறிய போது அவ்வாறான நிலைக்கு தாம் புதிய பிறப்பை பிறக்கவேண்டும் என்று அவர்கள் தம்மிடம் கூறியதாக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக