யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தின் தொடர் கூட்டம் எதிர்வரும் 28ஆம்
திகதி புதன்கிழமையும் 29ஆம் திகதி வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளது.கடந்த மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேரம் போதாமையினால் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நாளையும் நாளை மறுதினமும் அதன் தொடர்ச்சியாக இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
கடந்த கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் சுவீகரிக்கப்படும் காணிகள் தொடர்பாகவும் மாவட்டத்தின் விவசாய மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இந்நிலையில் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரின் முடிவிற்கமைய அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு எதிர்வரும் 26, 27ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கமைய நாளை யாழ். மாவட்ட அபிவிருத்திக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக