செவ்வாய், 20 மே, 2014

உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய படைகளை வாபஸ் பெற புடின் உத்தரவு....!!!!!

உக்ரைன் எல்லைப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் ரஷ்ய படையினரை வாபஸ் பெறும்படி அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
ரொஸ்டோவ், பெல்கொரோட் மற்றும் பிரியன்;ஸ்க் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் படைப்பிரிவினர் தமது முகாம்களுக்கு திரும்புமாறு புடின் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் ரஷ்யா இதுபோன்ற அறிவிப்பை விடுத்தபோதும் இதுவரை எல்லையில் இருக்கும் படையினர் வாபஸ் பெறப்படவில்லை என்று நேட்டோ
குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைன் எல்லையில் இருக்கும் சுமார் 40,000 ரஷ்ய துருப்புகள் அகற்றப்பட்டால் பிராந்தியத்தின் யுத்த பதற்றம் தணியும் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

"திட்டமிடப்பட்ட இராணுவ பயிற்கள் நிறைவடைவதால் ரொஸ்டோவ், பெல்கொரோட் மற்றும் பிரியன்;ஸ்க் பகுதிகளில் இருந்து துருப்புகளை வாபஸ் பெறும்படி பாதுகாப்பு அமைச்சருக்கு புடின் உத்தரவிட்டுள்ளார்" என்று ரஷ்யா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா ஆதரவு உக்ரைன் ஜனாதிபதி விக்டொர் யனுகோவிச் மக்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பதவி கவிக்கப்பட்டதை அடுத்து மேற்குலகுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா தம்முடன் இணைத்துக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக