பொல்கஹவெலவுக்கும் பொதுஹரவுக்கு மிடையில் ரயிலொன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை யடுத்து வட பகுதிக்கான ரயில் சேவைகள் நேற்று பாதிக்கப் பட்டதுடன் நான்கு ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
அண்மையில் பொதுஹர ரயில் நிலையத்துக்கருகில் விபத்துக்குள்ளான ரயில்
பெட்டிகளை இழுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது நேற்று அதிகாலை வடபகுதிக்கான ரயில் வீதியில் வைத்து இந்தக் கோளாறு ஏற்பட்டது.
குறித்த பாதையில் ரயில் சிக்கிக் கொண்டதையடுத்து அதனை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் வட பகுதிக்கான ரயில் சேவைகள் தடைப்பட்டன. இதையடுத்து கொழும்புக் கோட்டையில் இருந்து மட்டக்களப்பு செல்லும் ரயில், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வரும் ரயில், கொழும்பி லிருந்து பளை நோக்கிச் செல்லும் ரயில் பளையிலிருந்து கொழும்பு செல்லும் ரயில் என்பன ரத்துச் செய்யப்பட்டன.
நேற்று அதிகாலை முதல் பாதைகள் சீர்செய்யப்பட்டு சேவைகள் வழமை போல் இடம்பெறுவதாக குருநாகல் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக