கொலம்பியாவில் நேற்று பஸ் வண்டி ஒன்றில் திடீரென தீப்பிடித்ததால் குழந்தைகள் உட்பட 32 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.
லத்தீன் அமெரிக்காவின் ஒரு பகுதியான கொலம்பியாவில் உள்ள பண்டாசியன் என்ற நகரின் வீதியில் சென்றுகொண்டிருந்த பஸ் வணடி திடீரென தீப்பற்றியது.
அப்போது மளமளவென தீ பரவ ஆரம்பித்ததால், தீயில் சிக்கி 14 வயது குழந்தைகள் பலர் உட்பட 32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் மீட்கப்பட்ட 18 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் பஸ்ஸில்; பயணித்த அனைவரும் பண்டாசியன் நகரில் உள்ள கிருஸ்துவ தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக