முள்ளியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 28ஆம் திகதி முதல் காணாமற்போயுள்ளார் என அவரது உறவினர்களால் இன்று சனிக்கிழமை முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முள்ளியவளை 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி ஜெயன்( வயது 37) என்பவரே காணாமற்போயுள்ளார். இதய நோய் காரணமாக வவுனியா
வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் தனது பிள்ளையையும் அவருக்கு உதவியாக இருக்கும் அவரது மனைவியையும் கடந்த 28 ஆம் திகதி பார்வையிட்டுவிட்டு அன்று மதியம் 1 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து திரும்பிய அவர் காணாமற்போயுள்ளார் என அவரது உறவினர்களால் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக