இதுவரை பூமியில் வாழ்ந்தவற்றுள் மிகப்பெரிய உயிரினத்தின் உடல் எச்சங்கள் ஆர்ஜன்டீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொன்ம உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த டைனசோரின் தொடை எலும்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின் பிரகாரம், இது 40 மீற்றர் நீளமானதாகவும், 20 மீற்றர் அகலமானதாகவும் இருந்திருக்குமெனத்
தெரிகிறது. பாலைவனப்பகுதியில் வாழ்ந்திருக்கக் கூடிய இந்த டைனோஸர் வகை 77 தொன்; எடையை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 14 ஆபிரிக்க யானைகளின் மொத்த எடையைக் கொண்ட தாகவும் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது. அத்து டன் முன்பு கண்டறியப் பட்ட டைனோஸர் வகை களை விட இந்த டைனோ ஸர்களின் எடை 7 தொன் அதிகம் என வும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக