இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் குழுவினரும் இன்று காலை சீனாவைச் சென்றடைந்தனர். ஷங்காயில் புடோங் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் குழுவினரையும் ஷங்காய் மாநகர அரசின் பிரதி செயலாளர் நாயகம் ஹுவாங் றொங், வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான ஷங்காய் மக்கள் சங்கத்தின் நிறைவேற்றுப் பிரதித் தலைவர் வாங் ஸ்கியாஷு, சீனாவுக்கான இலங்கைத்
தூதுவர் ரஞ்சித் உய்யங்கொட ஆகியோர் வரவேற்றனர். ஜனாதிபதியுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் சிரேஷ்ட அலுவலர் காமினி சேனரத், ஜனாதிபதியின் மகன் லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ ஆகியோரும் சீனாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக