செவ்வாய், 20 மே, 2014

வவுனியாவில் சிறுமி துஷ்பிரயோகம் : சந்தேக நபர் தப்பியோட்டம்!!

வவுனியா – சுந்திரபுரம் பிரதேசத்தில் 14 வயதான சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிறுமியின் சகோதரியின் கணவர் சிறுமியை 5 மாதங்களுக்கு முன்னர்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுமி 5 மாத கர்ப்பியாக இருப்பதாகவும் சம்பவம் குறித்து நேற்று வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது. சிறுமி தற்போது, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக