முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு படைத்தரப்பின் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் நல்லூர் ஆலய முன்றிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறிதரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சுகிர்தன், சயந்தன், பரஞ்சோதி, சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர்
கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இதேவேளை இந்நிகழ்வுள் நடைபெறாமல் தடுப்பதற்காக நல்லூரில் குவிக்கப்பட்டிருந்த படையினரும் என்ன நடக்கின்றதென்று அறியாமல் கோயிலில் நடைபெறும் சமய நிகழ்வுதான் என எண்ணி தாமும் அதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. நல்லூர் ஆலயச் சூழலில் நேற்றிரவு முதலே படையினர், படைப்புலனாய்வாளர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் சூழ்ந்திருக்க இந்நிகழ்வு இன்று கூட்டமைப்பினரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்.பெரியகோயில் தேவாலயத்திலும் கூட்டமைப்பினரால் மெழுவர்த்தி ஏற்றி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக