திங்கள், 19 மே, 2014

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக மைத்திரிபால நியமனம்; 67ஆவது வருடாந்த மாநாடு ஜெனீவாவில் இன்று ஆரம்பம்!!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக இலங்கை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறுபத்து ஏழாவது அமர்வு இன்று ஜெனீவாவில் தொடங்கியுள்ளது. எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் முன்னதாக நிர்வாக குழு உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது. இதில் இலங்கை சுகாதார அமைச்சர்
மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டார். இந்த மாநாட்டில் நிதிக் கொள்கைகளை மேற்பார்வை செய்தல், ஆய்வு மற்றும் உத்தேச பட்ஜெட் ஒப்புதல் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்படவுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. 3000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர் .

அமர்வு நடைபெறும் 6 நாட்களிலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 194 உறுப்பு நாடுகளின் உயர் மட்ட பிரதிநிதிகள் சேர்ந்து உலக சுகாதார நெருக்கடிகள் குறித்து ஆராயவுள்ளனர். நீரிழிவு நோய், இதய நோய், புற்றுநோய் மற்றும் நுரையீரல் நோய் எனத் தொற்றா நோய்களைத் தடுக்க மற்றும் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளல்.

காச நோயைத் தடுக்க மற்றும் கட்டுப்படுத்த ஒரு புதிய உலக மூலோபாயத்தை எட்டுதல். வைரஸ், கல்லீரல் அழற்சி நோயாளிகளுக்கு சுகாதார மேம்படுத்த திட்டங்கள். தாய்,சேய் ஊட்டச்சத்து தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலக மூலோபாயம் முன்னேற்றம். போன்ற முக்கிய திட்டங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக