சனி, 17 மே, 2014

அஞ்சலி செலுத்த தயாராகிறது தமிழரசுக்கட்சி: முடிந்தால் இடத்தை அறிந்து கொள்ளட்டும் சீ.வி.கே.சிவஞானம் சவால் !

இறுதிப்போரின் போது உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக நாளை அஞ்சலி நிகழ்வை நடத்த இலங்கை தமிழரசுக்கட்சி தயராகிவருகிறது.

இதற்கான அழைப்பு போரில் தமது உறவுகளை இழந்த பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அது இடம்பெறும் இடத்தை வெளிப்படுத்த முடியாது என்று வடமாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். எந்த நிகழ்வு இடம்பெற்றாலும் படையினருக்கு அறிவிக்க
வேண்டும் என்று நியதி வடக்கு கிழக்கில் பின்பற்றப்பட்டு வருகிறது. எனினும் எதிர்வரும் 18 ஆம் திகதியின் நிகழ்வு தொடர்பில் படைத்தரப்புக்கு அறிவிக்கப்படமாட்டாது.

முடிந்தால் அவர்களின் புலனாய்வுப்பிரிவினர் குறித்த இடத்தை அறிந்துக்கொள்ளட்டும் என்று சிவஞானம் கூறினார்.

ஏற்கனவே நேற்று வடமாகாணசபையின் முன்னால் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் தீபங்களை ஏற்றி இறந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

எனினும் அந்த இடத்தை பின்னர் பொலிஸார் அதிரடியாக அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக