பிரதமர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரித்துள்ளார்.
இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்று வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி, தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு ராஜபக்சவை அழைத்திருப்பது தமிழக மக்களின் மன
உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.
ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கண்டனம் தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன்.
அதே வேளையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் ஜெயலலிதா புறக்கணிக்க வேண்டும்.
தனது கட்சியைச் சேர்ந்த 37 மக்களவை உறுப்பினர்களையும் விழாவில் பங்கேற்க வைக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக