வெள்ளி, 23 மே, 2014

வெளிநாடுகளில் வசிக்கும் 20 இலட்சம் இலங்கையர்களுக்கு வாக்களிக்க வசதி....!!!!

வெளிநாடுகளிலுள்ள 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வாக்களிப்புக்கான வசதிகளை எதிர்காலத்தில் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

நாட்டில் மொத்தமாக 150 இலட்சம் வாக்காளர்கள் உள்ள போது 20 இலட்சத் துக்கு மேற்பட்டோர் வெளிநாடுகளில் வாக்களிக்க வாய்ப்பின்றி உள்ளனர். இது தொடர்பிலான சட்ட திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் தேர்தல் திணைக்களம் கவனம் செலுத்தி
வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு அந்தந்த நாடுகளில் இருந்தவாறே வாக்க ளிக்கும் வசதிகளை பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளமையைச் சுட்டிக் காட்டிய தேர்தல் ஆணையாளர் நம்மவர்கள் 20 இலட்சம் பேர் தேர்தல்களில் வாக்களிக்காமல் இருப்பதென்பது அவதானத்திற்கொள்ள வேண்டிய விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடொன்று நேற்று தேர்தல் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக