சீன எதிர்ப்பு கலவரங்கள் வியட்னாமில் தீவிரமடைந்துள்ள நிலையில் தமது நாட்டு பிரiஜகளை அங்கிருந்து வெளியேற்ற சீனா ஐந்து கப்பல்களை அனுப்பியுள்ளது
ஏற்கனவே சீன அரசு வியட்னாமில் இருக்கும் 3000 க்கும் அதிகமான சீனர்களை வெளியேற்றி விட்டதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட் டுள்ளது. இந்நிலையில் வியட்னாம் விரைந்திருக் கும் சீன கப்பல்களில் முதல் கப்பல் நேற்று தனது பிரiஜகளை ஏற்றிக்கொண்டு சீனா நோக்கி புறப்பட்;டுச் சென்றது.
இந்த கலவரத்தில் தாக்கப்பட்ட 16 சீன நாட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் விசேட விமானம் மூலம் சீனா
அழைத்துவரப்பட்டதாக அந்நாட்டில் 'pன்ஜpயான் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
சீனா சர்ச்சைக்குரிய நீர்ப்பகுதியில் எண்ணெய் கிணறு தோண்டுவது குறித்து வியட்னாமில் ஏற்பட்டிருக்கும் சீனாவுக்கு எதிரான கலவரத்தில் இரு சீன தொழிலாளர்கள் கொல்லப்பட்டி ருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு வியட்னாம்; அரசு கடந்த சனிக்கிழமை கோரிக்கை விடுத்தது. இந்த சட்ட விரோத செயற்பாடுகள் உடன் நிறுத்த வேண்டும் என்றும் இது நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்றும் வியட்னாம் அரசு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட் டிருந்தது.
எனினும் நாட்டின் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டத்தை தொடர அதிருப்தியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஹனோய் மற்றும் ஹோ சீ மின் நகரங்களில் இடம்பெற்ற சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்மையில் வியட்னாம் வர்த்தக வலயத்தில் இருக்கும் சீனா, தாய்வான் மற்றும் தென் கொரிய நாடுகளினது 15 தொழிற்சாலைகளுக்கு தீ மூட்டினர். இந்த தாக்குதல்கள் வெளிநாட்டு முதலீடுகளில் தங்கியி ருக்கும் வியட்னாம் நிர்வாகத்தை கவலைய டையச் செய்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி சீனா, வியட்னாம் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத் துள்ளது.
"இந்த வன்முறை பரவுவதை தடுப்பதில் வியட்னாம் தரப்பு தோல்வியடைந்திருப்பது குறித்து நாம் கடும் அதிருப்தியுடன் உள்ளோம்" என்று சீன பாதுகாப்புத்துறை தலைவர் குவோ 'ங்குன் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தின் பல நாடுகளும் உரிமை கோரும் தென் சீன கடற்பகுதியில் சீன எண் ணெய் கிணறு தோண்ட எடுத்த முடிவை அடுத்தே சீனாவுக்கு எதிராக வியட்னாமில் ஆர்ப்பட்டம் வெடித்தது. இந்த விவகாரத்தால் குறித்த கடற்பகுதியில் இம்மாத ஆரம்பத்தில் சீன கப்பல்களை இடைமறித்து வியட்னாமியர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென் சீன கடற்பகுதியில் வியட்னாம், தாய் வான் நாடுகளும் உரிமை கொண்டாடும் பகுதி யில் சீனாவின் எண்ணெய் கிணறு தோண்டும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகி றது. இந்த விவகாரத்தில் வியட்னாம் தேசிய வாதிகள் கடும்போக்கு நிலைப்பாட்டை கொண்டி ருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
இதில் சீனாவினால் வெளியேற்றப்பட்டுவரும் பெரும்பாலானோர் வியட்னாமில் இருக்கும் சீன தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் சீன நாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக