திங்கள், 19 மே, 2014

நாட்டில் மஹிந்த சிந்தனை திட்டம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர.....!!!!!

எமது நாட்டில் மஹிந்த சிந்தனை திட்டத்தினூடாக விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்பட்டு வருவதினூடாக நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமை த்துவ அமைச் சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அம்பலாந்தோட்ட சமனல கம ஆரம்ப பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதான மண்டபத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்ததாவது; எமது நாட்டிற்கு கோதுமை மாவினை இறக்குமதி செய்து எமது மக்களுக்கு பழக்கிய
வெளிநாட்டவர்களுக்கும் நாம் இன்று சோறு சாப்பிட பழக்கியுள்ளோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதினூடாக எமது குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது தெட்டத் தெளிவாகும். நாம் வெளிநாடுகளிலிருந்து கடன் தொகைகளை பெற்று இவ்வாறான அபிவிருத்திகளை முன்னெடுப்பது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியே.

அன்று எமக்கு கிடைக்காதவைகளை எமது குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றோம்.

இதனால்தான் நகரங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த சில வளங்கள் தற்பொழுது கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக