வவுனியா, கலாபோகஸ்வௌ கிராமத்தில் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்த கூட்டமொன்றில் குளவிகள் கொட்டியதில் மெய்ப்பாதுகாவலர் அடங்கலாக 30 போர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டம் இடம்பெற்ற போது மக்களால் கொழுத்தப்பட்ட பட்டாசின் சத்தத்திற்கே குளவிகள் கலைந்து வந்து மக்கள் மீது கொட்டியதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக குளவி கொட்டியுள்ளன.
இதனையைடுத்து நாமல் ராஜபக்சவைிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு அவரது மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாத்துள்ளனர்.
இதன்போது, மெய்பாதுகாவலர்கள், பொலிஸார், இராணுவத்தினர் உட்பட
பொதுமக்கள் மீதும் குளவிகள் கொட்டியுள்ளன.
இந்நிலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்கள் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 30 பேருக்கும் உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு தற்போது அவர்கள் பாதிப்பின்றி உள்ளதாக தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு. அகிலேந்திரன் குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்களில் குழந்தைகளும் உள்ளடங்கியிருந்ததாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக