திங்கள், 26 மே, 2014

உக்ரைனின் தீர்க்கமான ஜனாதிபதி தேர்தல் வாக்கு பதிவு நிறைவு...!!!

உக்ரைனில் முன்னாள் ஜனாதிபதி விக்டொர் யனுகோவிச் வெளியேற்றப்பட்டதை அடுத்து கடந்த சில மாதங்களாக நீடிக்கும் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் அங்கு புதிய ஜனாதிபதியை தேர்வுசெய்யும் தேர்தல் நேற்று இடம்பெற்றது.

திர்கால ஐக்கிய உக்ரைனுக்கான தீர்க்கமான தேர்தலாக கருதப்படும் ஜனாதிபதி தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும் கிழக்கு உக்ரைனின்; ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் இந்த தேர்தலுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையுறு
விளைவித்தனர்.

அண்மைய தினங்களில் பிரிவினைவாதிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு உக்ரைனில் குறிப்பாக டொனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்களில் தொடரும் வன்முறைகள் இந்த தேர்தல் ஏற்பாடுகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

தேர்தல் வாக்கு பதிவுகள் நேற்று ஆரம்பிக்கபட்ட நிலையில் டொனட்ஸ்க் நகரில் எந்த வாக்குச் சாவடியும் திறக்கப்படவில்லை என்று தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டொர் யனுகோவிச்சின் ரஷ்யா ஆதரவு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து கடந்த பெப்ரவரியில் அவர் பதவி விலக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்தே புதிய ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

'சொகொலேட் மன்னன்' என்று அழைக்கப்படும் இனிப்பு தீன்பண்ட அதிபரான பெட்ரோ பொர'ன்கோவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கருத்துக் கணிப்புகளின்படி பொர'ன்கோவுக்கு அடுத்ததாக முன்னாள் பிரதமர் யுலி டைமொn'ன்கோ முன்னிலையில் உள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற ஒரு வேட்பாளர் 50 வீதத்துக்கு மேல் வாக்குகளை வெல்ல வேண்டும். ஒருவரும் பெரும்பான்மை பெறாத பட்சத்தில் இரண்டாம் சுற்று வாக்குகெடுப்பு ஜ_ன் 15 ஆம் திகதி நடைபெறும்.

இடைக்கால பிரதமர் அர்சனி யனுகோவிச் தொலைக்காட்சியில் தோன்றி, உக்ரைனை பாதுகாக்க அனைவரும் வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தார். "உக்ரைன் மக்கள் மேற்குக்கு கிழக்கிற்கு வடக்கிற்கு மற்றும்; தெற்கிற்கு ஆதரவானவர்கள் என்பதை வெளிப்படுத்துவதாக இந்த தேர்தல் இருக்கும்" என்று அவர் குறிப்பட்டார்.

மறுபுறத்தில் உக்ரைன் ஜனாதிபதி தேர்தலுக்கு மதிப்பளிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். இந்த தேர்தலில் எவர் தேர்வுசெய்யப்பட்டாலும் அவருடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் புடின் கூறி இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக