ஞாயிறு, 18 மே, 2014

தொடரும் ''தீ'' வைப்புகள், இனி ஜெனிவா செல்ல நேரிடுமாம்!!! இலங்கை நீதி அமைச்சர்

மாவனல்லை நகரில் பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ரீகல் ஹார்ட் வெயார் எனும் வர்த்தக நிலையம் இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது பற்றி எமது பூர்வீகம் இணையத்தளம் செய்தி  வெளியிட்டிருந்தது.

பொதுமக்களும் மாவனல்லை பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக் கொண்டு வந்த போதிலும் அவ்வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்ம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது திட்டமிட்ட ஒரு சதி நடவடிக்கை என்று கூறப்படுகிறது.


அதேவேளை இந்த சம்பவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் வன்மையாக கண்டித்துள்ளார்.

மட்டக்களப்பில் தங்கியிருந்த தான், இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மூதூர் விஜயத்தினை இரத்துச் செய்து விட்டு மாவனல்லைக்கு விரைவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அளுத்கம தீ வைப்பு சம்பவம் இடம்பெற்று ஒரு சில தினங்களுக்குள் மாவனல்லையில் தீ வைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பங்கள் குறித்து சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் அசமந்த போக்குடன் உள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் தொடருமாயின் ஜெனீவா வரை செல்ல வேண்டி நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக