ஞாயிறு, 25 மே, 2014

இந்தியா செல்லும் மஹிந்த குழுவில் யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரியும்; நாளை காலை பயணம்!!

இந்தியப் பிரதமர் பதவியேற்பு நிகழ்வுக்கு செல்லும் இலங்கைக் குழுவில் யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா இடம்பெறுகிறார் என புதுடில்லிக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் அறிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் ஜனாதிபதியின் குழு இந்தியா பயணமாகிறது. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி நாளை மாலை பதவியேற்கிறார். இந்த நிகழ்வுக்கு சார்க்
நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியா செல்கிறார். இந்த குழுவில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்,யாழ்.மாநகரசபை மேயர் யோகேஸ்வரி ஆகியோரும் இடம்பெறுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை புறப்படும் இலங்கைக் குழு முற்பகல் 10 மணிக்கு இந்தியாவைச் சென்றடையவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக