பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த இயக்கத்தின் தலைவர் சி.இராசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், டில்லியில் நாளை பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில்
பங்கேற்க இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்ஷவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ராஜபக்ஷவின் இந்திய வருகையைக் கண்டித்து பெங்களூர் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பங்கேற்க இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்ஷவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ராஜபக்ஷவின் இந்திய வருகையைக் கண்டித்து பெங்களூர் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக