இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகப் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசியல் சாசனம் மற்றும் மரபுப்படி நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஒருவர் வருவதற்கு அவரது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் குறைந்த பட்சம் பத்து வீத ஆசனங்களாவது இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால் தற்போதைய தேர்தல் முடிவுகளின் படி எந்த எதிர்க்கட்சியும் தனித்து அந்த எண்ணிக்கை
ஆசனங்களைப் பெறவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தம் 542 ஆசனங்கள் உள்ளன.
எனவே ஒரு கட்சியின் எம்.பி. ஒருவர் எதிர்கட்சித் தலைவர் என்ற உத்தியோகபூர்வ அந்தஸ்து நிலையைப் பெறவேண்டுமானால் குறைந்த பட்சம் 55 எம்.பிக்களையாவது அவரது கட்சி பெற்றிருக்க வேண்டும். தற்போதைய நிலைமையில் பிரதான எதிர்க்கட்சி நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி கூட அந்த எண்ணிக்கையைப் பெறவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக