விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் நெடியவனை இலங்கையிடம் கையளிக்க வலியுறுத்தி நோர்வே தூதரகம் முன் ஹெல உறுமயவினர் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
ஜாதிக ஹெல உறுமய முன்னின்று நடத்தும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, நாளை பிற்பகல் 2 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் இருந்து பாதயாத்திரை மூலம் நோர்வே தூதரகத்தைச் சென்றடைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்போது நெடியவனை இலங்கையிடம் ஒப்படைக்க வலியுறுத்தி மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை, “பெற்ற வெற்றியை தக்கத்
வைத்துக் கொள்வோம், புலிப் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியோம்” என்ற தொனிப்பொருளில் ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள புதிய நகர மண்டபத்தில் விசேட போர் வெற்றி கொண்டாட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
பிற்பகல் 3.30 அளவில் இந்த நிகழ்வு நடைபெறும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரச்சாரச் செயலாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக