வெள்ளி, 23 மே, 2014

பங்களாதேஷ் பல்கலையில் இலங்கை மாணவன் உயிரிழப்பு...!!!!

பங்களாதேஷ் சித்தகொங் பல்கலை க்கழக மருத்துவ பீடத்தில் இறுதி யாண்டில் கல்வி பயின்ற குருநாக லையைச் சேர்ந்த மாணவன் ஆறா வது மாடியிலிருந்து வீழ்ந்து மரணமா கியுள்ளார்.

குருநாகல் மல்லவபிட்டியைச் சேர் ந்த முஹம்மது இஹ்ஸான்(23) என்ற மாணவன் நேற்று முன்தினம் 21 அதி காலை அவர் தங்கியி ருந்த விடுதி யின் முன்றலில் இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த
நிலையில் காணப்பட்டுள்ளார். முதலுதவி கூட வழங்கக்கூடிய சூழல் உருவா யிருக்கவில்லையென இஹ்ஸானின் உறவினர் அல் தெரிவித்தார்.

அவர் மேலும்  தகவல் வழங்கும் போது தெரிவித்ததாவது, படிப்பில் படுகெட்டிக்காரனான இம்மாணவன் மருத்துவபீட இறுதியாண்டில் கல்வி கற்றுக் கொண்டிருந்தான். சம்பவ தினமன்று இரவு அங்கு கடுமையான உஷ்ணம் நிலவியதாகவும் தனது நண்பர்களிடம் உஷ்ணம் தாங்க முடியாததால் மொட்டை மாடியில் சென்று உறங்குவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

பாதுகாப்பற்ற அந்த மொட்டை மாடியிலிருந்து இஹ்ஷான் தவறுதலாக வீழ்ந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டரா? என்ற சந்தேகம் நிலவும் நிலையில் அந்நாட்டு பொலிஸார் தற்கொலையென தெரிவித்துள்ளனர்.

இஹ்ஷானுடைய பெற்றார் தென்னாபிரிக்கா பொஸ்வானாவிலேயே குடியிருக்கின்றனர். அவர்கள் இன்றைய தினம் (23.05.2014) பங்களாதேஷ் வந்ததும் இஹ்ஷானுடைய ஜனஸா அங்கேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இஹ்ஷானுடைய ஏனைய இரு சகோதரர்களும் சீனா மற்றும் மலேசிய நாடுகளிலேயே கல்வி கற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக