குருநாகல், பொத்துஹெர பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, வடபகுதிக்கான தூர ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து வவுனியா, பளை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் மேற்படி பகுதிகளிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த ரயில் சேவைகள் நாளை இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக