செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் அதிக எடையைத் தாங்கிச் செல்லும் புதிய விண்கலம் ஒன்றை நாசா வடிவமைத்துள்ளது. சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வேலைகளைத் தொடங்கியுள்ளது நாசா. மனிதர்களை சுமந்து செல்லும் வகையில் அதிக எடை தாங்கும் வகையில் இந்தப் புதிய விண்கலம் தயார் செய்யப் பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த விண்கலம் 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இதன் முதல் சோதனை ஓட்டத்தில், இது விண்வெளிக்கு 130 டன் எடையுள்ள பொருட்களை தாங்கிச்செல்லும் என நம்பப்படுகிறது. புதிய விண்கலம் மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது. தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக